அருட்பெருஞ்ஜோதி ஆசிரியர் அண்ணாதுரை
அருட்பெருஞ்ஜோதி ! அருட்பெருஞ்ஜோதி ! அருட்பெருஞ்ஜோதி ஆசிரியர் அண்ணாதுரை அருட்பெருஞ்ஜோதி “ தம்பி ! விளக்கிலே எண்ணெயைத் தாராளமாக ஊற்று . திரியை நன்றாக முறுக்கிவிடு , தீபம் நன்றாகப் பிரகாசிக்கட்டும் . வேட்டியை நன்றாக வெளுக்கச் சொல்லு . தூய வெண் உடைய அணியவேண்டும் . விபூதி மடலிலே நீறு நிறையப் போட்டுவை . மேனியெலாம் பூசவேண்டும் . நீறு பூசவேண்டும் . சந்தனம் இருக்கிறதா பார் . சமையல் வேலைகளை ஜாக்கிரதையாகக் கவனி . ...