Posts

Showing posts from August, 2010

இறை இன்ப குழைவு

கருவிற் கலந்த துணையேஎன் கனிவில் கலந்த அமுதேஎன் கண்ணிற் கலந்த ஒளியேஎன் கருத்திற் கலந்த களிப்பேஎன் உருவிற் கலந்த அழகேஎன் உயிரிற் கலந்த உறவேஎன் உணர்விற் கலந்த சுகமேஎன் னுடைய ஒருமைப் பெருமானே தெருவிற் கலந்து விளையாடுஞ்ச சிறியேன் தனக்கே மெய்ஞ்ஞான சித்தி அளித்த பெருங்கருணைத் தேவே உலகத் திரளெல்லாம் மருவிக் கலந்து வாழ்வதற்கு வாய்த்த தருணம் இதுஎன்றே வாயே பறையாய் அறைகின்றேன் எந்தை கருணை வலத்தாலே

தினம் ஒரு திருக்குறள்

பல்லார் முனியப் பயனில சொல்லுவான் எல்லாரும் எள்ளப் படும். ( குறள் எண் : 191 ) மு.வ : கேட்டவர் பலரும் வெறுக்கும் படியாகப் பயனில்லாத சொற்களைச் சொல்லுகின்றவன், எல்லாராலும் இகழப்படுவான் சாலமன் பாப்பையா : பலரும் கேட்டு வெறுக்கப், பயனற்ற சொற்களைச் சொல்லுபவன் எல்லாராலும் இகழப்படுவான்.

வள்ளலார் அய்யாவின் அகவலில் சில துளிகள்

இன்புறு நனுலத் தெண்ணியாங் கெண்ணியாங் கன்புறத் தருசபை யாருட்பெருன்ஜோதி எம்மையு மெனைவிட்டிரையும் பிரியா தம்மையப் பனுமா மருட்பெருன்ஜோதி பிரிவுற்று ரற்றியாப் பெரும்போருலஎன் னறிவுக் கரிவ மருட்பெருன்ம்ஜோதி சாதியு மதமும்ஞ் சமயும்ங் காணா ஆதிய நாதியாமருட்பெருன்ஜோதி

வள்ளலார் போதனைகள்

அன்பு வெள்ளமாகும். அது ஒருநாள் நம்மை முற்றும் விழுங்கிக் கரை கடந்து போகும். மறப்பது மனிதரியல்பு, மறக்காதிருப்பது மகத்தான இயல்பு. இங்கே பெற்ற தாயை மகன் மறக்கலாம். பிள்ளையைத் தாய் மறக்கலாம், தாங்கி நிற்கும் உடலை உயிர் மறக்கலாம், தனது ஆதாரமான ஆவியை உடல் மறக்கலாம், நெஞ்சம் கற்றதை மறக்கலாம், ஆனால், தவத்தில் மிக்கார் மனத்தில் உறையும் தலைவனை நாம் மறக்கலாமா? எல்லைகளைக் கட்டியாள எண்ணமில்லை. எதிலெதிலோ பற்று வைத்து மாளவும் விரும்பவில்லை. அந்த சொர்க்கமே கிடைப்பதாயினும் அதை தூக்கி எறிந்துவிட்டு என் மேலோனின் கருணை ஒன்றையே வேண்டி நிற்பேன். அருட் பெருஞ்ஜோதி என்பது அகத்தேயும், வெளியேயும் வெளிச்சத்தைத் தருகிறது. நீங்கள் எதைச் செய்தாலும், அது அடுத்தவருக்கு எந்தக் காலத்திலும் இடையூறு செய்வதாய் இருக்கக்கூடாது. அதுவே பொது நோக்கு. உங்கள் எண்ணமும் செயலும் நல்லதாய் இருக்க வேண்டும். நமது புருவ மத்தியில் ஆறு பட்டையாய் உருட்சியுள்ள ஒரு மணி பிரகாசம் பொருந்தி இருக்கிறது. இந்த ஜோதி மணியைத்தான் நாம் 'சண்முகம்' என்று அழைக்கிறோம். பானையில் சோறு வெந்துவிட்டதா என்று பார்க்க ஒவ்வொரு சோற்றையுமா பதம் பார்க்கிறார்கள்...

வள்ளலார் ஆன்மிக சிந்தனைகள்

இங்கே இறைவன் ஒருவன்தான். இறவாமை கல்விக்குத்தான். மனிதன் இனங்கள் பல கண்டாலும் இறப்பில் எல்லோரும் ஒன்றே. இவர்கள் நிறத்தில் வெளுத்திருந்தாலும் மனத்தே கருத்தவர்கள். வெளியே வெளிச்சம், உள்ளே இருட்டு. இத்தகு மனிதர்கள் வாழும் இந்த உலகத்தைத் திருத்தி இவர்களுக்கு மண்ணிலே விண்ணைக்காட்ட மகேசன் என்னைப் படைத்தான். தன்னை எத்தனை நிந்தித்துப் பேசியபோதும் இறைவன் இவர்களிடம் தயவாகவே உள்ளான். நான் சூது பேசவில்லை. இவர்களை எனது சுற்றத்தாராகவே எண்ணுகிறேன். இவர்கள் தங்கள் வெற்றான விவாதங்களை விட்டு அந்த மேம்பட்டவனின் அருளைப் போற்றுதல் வேண்டும். காலத்தை வீணில் கழித்திடல் ஆகாது. தாழ்ந்த குலம், உயர்ந்த குலம் என்று தரம் பிரித்து பார்க்கின்றோம். நரை, மரணம், மூப்பு அறியாத நல்லுடம்பைப் பெற்றவரல்லவா நற்குலத்தவர் ஆவார். கருணை நிறைந்தவராயிருங்கள். அது உங்கள் உள்ளத்தில் ஊற்றாய் பொங்கட்டும்; உடம்பெங்கும் வழிந்தோடட்டும். அடுத்தவர் துன்பத்தைக் காணச் சகியாதவரே கருணைமிக்கவர். அடுத்தவர் படும் இன்னலைத் துடைத்தெறிவதே கருணை உள்ளம். நான் இறவாத உடம்பு கேட்டேன். இறைவன் எனக்கு உவப்புடன் அளித்தான். தன்னைப் போலவே பிறரையும் பாவிக்கின்ற ம...

ஆன்மிக சிந்தனைகள் »வள்ளலார்

Image
எத்தனை படிகள் இருந்தாலென்ன? இறைவன் உங்கள் கண்ணுக்கு எட்டுவதில்லை. கருத்துக்கு எட்டுவான். உங்கள் கைக்கு எட்டுவதில்லை. வாய்க்கு எட்டுவான். அவனை அன்போடு பற்றுங்கள். விலகமாட்டான். எங்கே அன்பிருக்கிறதோ அங்கே இறைவன் இருக்கிறான். பலகாலம் ஆண்டவனை வணங்கிப் பெறும் புண்ணிய பலன்களை எல்லாம் ஒரே நாளில் பெற முடியும். எப்படி என்றால் பசியால் வாடும் அன்பர் முகம் மலர உணவினைத் தருமம் செய்யுங்கள். நிச்சயம் புண்ணியம் கிடைக்கும். எத்தனை படிகள் என்று மலைத்து நிற்காதீர்கள். எல்லாப் படிகளும் கடந்து விடலாம். உச்சிக் கமலத்தில் ஊற்றெடுக்கும் அமுதத்தை உண்டு களிக்கலாம். மனதில் இறைவனை அடைய வேண்டும் என்ற வைராக்கியத்தை மட்டும் பற்றிக் கொள்ளுங்கள். கதிரவன் ஓடிக்கொண்டே இருக்கிறான். அவன் பின்னால் காலம் ஓடிக் கொண்டே இருக்கிறது. ஒவ்வொருநாளாய் இரவும்பகலும் கழிகிறது. காலத்தை விரயம் செய்யாமல் நிலையான தருமங்களைச் செய்யுங்கள்.மறப்பது மனிதர் இயல்பு. பெற்ற தாயை மகன் மறக்கலாம். பிள்ளையைத் தாய் மறக்கலாம். உடலை உயிர் மறக்கலாம். உயிரை உடல் மறக்கலாம். நெஞ்சம் தான் கற்ற கல்வியை மறக்கலாம். ஆனால், தவத்தில் சிறந்தவர்களின் மனத்தில் உறையும் ...

Vallalar Sinthanaigal

* நான் உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசுவதில்லை. * ஏழு திரைகளுக்கு அப்பால் இருக்கிறது பேருண்மை. அவன் அத்தனை திரைகளையும் அகற்றி எனக்கு மெய்ப்பொருள் வெளிப்படச் செய்தான். நம்மில் ஒரு மாயை பேழையைத் தந்தான். அரிய பொருள் ஒன்று அதிலிருப்பதாகச் சொன்னான். திறந்து பாரென ஒரு திறவுகோலையும் கொடுத்தான். வாழ்க்கை முழுவதும் அதைத் திறந்து பார்க்கிற முயற்சியில் நான் இருக்கிறேன். * பொய்யை மெய்யாக்கி போற்றத் தெரிந்தவர்கள் வணங்கி நிற்பது ஒரு தெய்வமே அல்ல, வழியாய்க்
Image
பயம் கூடவே கூடாது * சூரியோதயத்திற்கு முன் தூக்கத்திலிருந்து விழித்தெழுங்கள். அதிகாலைப் பொழுது கடவுளைத் தியானம் செய்ய ஏற்றவேளை. இவ்வேளையில் விபூதி தரித்துக் கொண்டு கடவுளை சிந்திப்பது மிகவும் நல்லது. * எந்த விதத்திலும் உணவில் புலால் சேர்க்கக்கூடாது. எவ்வளவு சுவையுள்ளதாக இருந்தாலும் அளவோடு உண்பது சிறப்பு. பகலில் சிறிது நேர ஓய்வும் கூட உடலுக்கு மிகவும் பயனுடையதாகும். * மாலை வேளையில் கொஞ்ச தூரம் வியர்க்கும்படியாக நடை பயில வேண்டும். இரவு உணவு பகல் உணவைக் காட்டிலும் குறைவாக இருக்க வேண்டும். எப்போதும் பயப்படுதல் கூடாது. * கொலை, கோபம், சோம்பல், உரத்துப் பேசுதல், பொய், பொறாமை, கடுஞ்சொல் இவையெல்லாம் அறவே தவிர்க்க வேண்டியவை. உற்சாகத்தை எப்போதும் இருக்கும்படியான நல்ல மனநிலை வேண்டும். * உடலுக்கு உயிர் ஒன்றே. அதுபோல, இவ்வுலகம் முழுமைக்கும் கடவுள் ஒருவரே. தெய்வங்கள் பல என்று சிந்திப்பது திருவருளைப் பெறாதவர்கள் சொல்வதாகும். - வள்ளலார்
இன்பம் விழையான் வினைவிழைவான் தன்கேளிர் துன்பம் துடைத்தூன்றும் தூண். ( குறள் எண் : 615 ) மு.வ : தன் இன்பத்தை விரும்பாதவனாய் மேற்க்கொண்டச் செயலை முடிக்க விரும்புகிறவன், தன் சுற்றத்தாரின் துன்பத்தைப் போக்கித் தாங்குகின்ற தூண் ஆவான். சாலமன் பாப்பையா : இன்பத்தை விரும்பாதவனாய்ச் செயல் செய்வதையே விரும்புபவன், தன் உறவும் நட்புமாகிய பாரத்தின் துன்பத்தைப் போக்கி, அதைத் தாங்கும் தூண் ஆவான்.

Salam to Kalam - Visions of India

DEVELOPED INDIA Dr. APJ Abdul Kalam. The President of India “I have three visions for India. In 3000 years of our history, people from all over the world have come and invaded us, captured our lands, conquered our minds. From Alexander onwards. The Greeks, the Turks, the Moguls, the Portuguese, the British, the French, the Dutch, all of them came and looted us, took over what was ours. Yet we have not done this to any other nation. We have not conquered anyone. We have not grabbed their land, their culture, their history and tried to enforce our way of life on them. Why? Because we respect the freedom of others. That is why my first vision is that of FREEDOM. I believe that India got its first vision of this in 1857, when we started the war of independence. It is this freedom that we must protect and nurture and build on. If we are not free, no one will respect us. My second vision for India is DEVELOPMENT. For fifty years we have been a developing nation. It is time we see ourselves a...

swami viveganandar sinthanaigal-4

* நம்முள் நன்மை, தீமை என்று இரு விதமான எண்ணங் களும் இருக் கின்றன. நல்ல விஷயங்களில் மட்டும் கருத்தைச் செலுத்தினால் மட்டுமே நாம் நல்லவர்களாக முடியும். * நாம் இப்போது இருக்கும் நிலைமைக்கு நாமே பொறுப்பாளிகள். எதிர்காலத்தில் நாம் எப்படி எல்லாம் இருக்க வேண்டும் என்று விரும்புகிறோமோ அதை நம்முடைய செயல்களால் உண்டாக்கிக் கொள்ள முடியும். * மகத்தான செயல்களைச் செய்வதற்காக ஆண்டவன் நம்மைப் படைத்திருக்கிறான். அவற்றை செய்வதற்கு விடா முயற்சியோடு உங்கள் கடமைகளைச் செய் யுங்கள். * சரியான வழியில் செலுத்தப்பட்ட மனம் நம்மைக் காக்கும். நம்மை விடுதலை பெறச் செய்யும். மனதை ஒருமுகப்படுத்தும் போது நம் மனோசக்தி வளரும். அதனால், நாம் அதிக அளவில் அறிவைப் பெறமுடியும். * தூய்மை, பொறுமை, விடாமுயற்சி ஆகிய மூன்றும் வெற்றிக்கு இன்றியமையாதவை. அத்துடன் இவை அனைத்திற்கும் மேலாக அன்பு இருந்தாக வேண்டும். * நாம் எதையும் சாதிக்கவல்லவர்கள். உறுதியான மன நிலையில் விஷத்தைக் கூட பொருட்படுத்தாமல் இருந்தால், அந்த விஷம் கூட சக்தி அற்றதாகி விடும்.

swami viveganandar sinthanaigal-3

செல்வம் படைத்தவன் செல்வம் இல்லாதவன் மேல் செலுத்தும் ஆதிக்கத்தைத் தவிர்க்க வேண்டும். அறிவுடையவன் அறிவு குறைந்தவன் மேல் செலுத்தும் ஆதிக்கத்தை விட வேண்டும். முப்பத்து மூன்று கோடிப் புராண தெய்வங்களிடத்தும், மேலும் அவ்வப்போது நம்மிடையே அன்னிய நாட்டவர் புகுத்தியிருக்கும் இதர தெய்வங்களிடத்தும், நம்பிக்கை இருந்தாலும் கூட, ஒருவனிடத்தில் தன்னம்பிக்கை இல்லாவிட்டால் அவனுக்குக் கதி மோட்சமில்லை. பாவம் என்ற ஒன்று உண்டென்றால், அது நான் பலவீனமானவன், மற்றவர்கள் பலவீனமானவர்கள் என்று சொல்வது ஒன்றுதான். சுதந்திரமானவனாக இரு. எவரிடமிருந்தும் எதையும் எதிர்பார்க்காதே. உனது கடந்த கால வாழ்க்கையை நீ பின்னோக்கித் திரும்பிப் பார்ப்பாயானால், நீ வீணாக எப்போதும் மற்றவர்களிடமிருந்து உதவியைப் பெற முயற்சி செய்ததையும் அப்படி எதுவும் வராமற் போனதையும் தான் காண்பாய். வந்த உதவிகள் எல்லாம் உனக்குள் இருந்தவையாகத்தான் இருக்கும். நம்பிக்கை! நம்பிக்கை! நம்மிடத்தில் நம்பிக்கை! கடவுளிடத்தில் நம்பிக்கை! இதுவே மகிமை பெறுவதன் ரகசியமாகும். நீ எதை நினைக்கிறாயோ அதுவாகவே ஆகிறாய். நீ உன்னைப் பலவீனன் என்று நினைத்தால் பலவீனனாகவே ஆகிவிடுகிறாய்...

swami viveganandar sinthanaigal

இளைஞர்களே! பெருஞ்செயல்களை செய்து முடிப்பதில் எப்போதும் முன்னேறிச் செல்லுங்கள். ஏழைகளிடமும், சமுதாயத்தில் ஒடுக்கப்பட்டவர்களிடமும் இரக்கம் காட்டுங்கள். நமக்கு மரணமே வாய்த்தாலும்கூட அவர்களுக்கு இரக்கம் காட்டுவது நமது லட்சியம் ஆகும். என்னுடைய லட்சியத்தை உண்மையில் சில சொற்களில் சொல்லி முடித்துவிடலாம். அதாவது, மக்களுக்கு அவர்களுடைய தெய்வீகத் தன்மையை எடுத்துச் சொல்வதும், வாழ்க்கையின் ஒவ்வொரு இயக்கத்திலும் அதை எப்படி வெளிப்படுத்திக் காட்டுவது என்பதை எடுத்துச் சொல்வதும்தான் அது. எழுந்திருங்கள். விழித்திருங்கள். நீங்களும் விழித்திருங்கள், மற்றவர்களையும் விழிக்கச் செய்யுங்கள். உங்களுடைய இந்த உலக வாழ்க்கை முடிவடைவதற்கு முன்னால், மனிதப்பிறவியினால் பெறுவதற்கரிய பெரிய நன்மையை அடையுங்கள். லட்சியத்தை அடையும் வரையில் நில்லாமல் முன்னேறிச் செல்லுங்கள். உயர்ந்த லட்சியம் கொண்ட மனிதன் ஒருவன் ஆயிரம் தவறுகள் செய்தால், லட்சியம் ஒன்றுமில்லாமல் வாழ்பவன் ஐம்பதாயிரம் தவறுகள் செய்வான் என்று நான் உறுதியாக சொல்வேன். மக்கள் உன்னை புகழ்ந்தாலும் சரி, இகழ்ந்தாலும் சரி, கடவுள் உனக்கு அருள் புரியட்டும், அல்லது புரியாமல் போக...

swami viveganandar sinthanaigal

தொடர்ந்து நல்ல எண்ணங்களையே சிந்தித்தபடி நல்ல செயல்களைச் செய்து வருவதால் மட்டுமே தீயஎண்ணங்களை தலைகாட்டாதபடி தடுக்க முடியும். ஒழுக்கம் என்பது மீண்டும் மீண்டும் செய்யப்படும் பழக்கங்களால் தான் உருவாகிறது. எனவே, தன்னைச் சீர்படுத்திக் கொள்ள முயல்பவன், நல்ல பழக்கங் களை இடைவிடாது பின்பற்ற வேண்டும். இந்த உலகத்திலேயே நன்மைக்கு அழைத்துச் செல்லும் பாதை தான் மிகவும் கரடுமுரடாகவும், செங்குத்தானதாகவும் இருக்கிறது. அந்தப் பாதையில் இத்தனை பேர் வெற்றி பெற்றிருக்கிறார்களே என்பது தான் வியப்பிற்குரிய விஷயம். தோல்வியை அடைவதில் ஒன்றும் வியப்பில்லை. ஆயிரம் முறை இடறினாலும் நல்ல ஒழுக்கத்தில் உறுதியாக நிலை நிற்பவனுக்கே வெற்றி கிடைக்கும். லட்சியவாதி தன் பணியில் ஏளனம், எதிர்ப்பு ஆகியவற்றை சமாளித்தாக வேண்டும். வாழுங்காலத்தில் வெற்றியாளர்கள் தவறாகவே புரிந்து கொள்ளப்படுகிறார்கள். எனவே, எதிர்ப்பையும், அடக்குமுறையையும் வரவேற்கக் கற்றுக்கொள்ளுங்கள். ஒன்று மட்டும் நிச்சயம். எத்தனை எதிர்ப்பும், இடையூறும் ஏற்பட்டாலும் கடவுளிடம் முழுமையாக நம்பிக்கை கொண்டவன் தன் உறுதியிலிருந்தும், வைராக்கியத்திலிருந்தும் அசையாமல் நிலைத்து நி...