Wednesday, September 29, 2010

வள்ளலார் பேருபதேசம்

ஆதலால், இவ்வுலகத்தில் விசாரமென்கின்ற உண்மை தெரியாது, விசாரமென்று வழங்கி, அதை துக்கமென்றே சொல்லுவார்கள்.நாம் அப்படி அர்த்தம் பண்ணக்கூடாது. அவர்கள் பண்ணுகின்றது - துக்கமே விசாரமேன்கின்றது அது தப்பு ; அவ்வர்த்தமுமன்று. சார மேன்கிறது துக்கம். விசாரமேன்கிறது துக்க நிவர்த்தி. வி உபசர்க்கம். சாரமென்கின்றது துக்கத்தை நிவர்த்தித்து வி. ஆதலால், விசாரமேன்கின்றது முன் சொன்னபடி பரலோக விசாரத்தையே குறிகின்றது. ஆதலால் இடைவிடாது நாம் விசார வசந்தராயிருக்க வேண்டியது. மேலும் வி-சார மென்பது ; வி-விபத்து ; சாரம் நீங்குதல் , நடத்தல் , ஆதலால் இடைவிடாது நன்முயர்சியின்கன்பயிலுதல் வேண்டும் .

மேலும், சிலர் "இது ஆண்டவர் வருங்கின்ற தருணமாக இருகின்றதே ! இத்தருணத்தில் முயற்சி செய்வானேன்? ஆண்டவர் வந்தவுடனே பெற வேண்டியதை நாம் பெற்றுகொள்ளப்படாதோ ? " என்று வினவலாம் . ஆம் இஃது - தாம் வினவியது நலம்தான் . நம்மவர்களின் திரை நீங்க போகின்றதென்றும் சத்தியந்தான். நீங்களேல்லாவரும் பெற வேண்டியதைப் பெற்றுகொள்ளுகின்றதுஞ்ச சத்தியந்தான். ஆனால் முன் சொன்ன ராக சம்பந்தமான பச்சைத்திரை இரண்டு கூறாக இருக்கின்றது. யாவெனில்; அசுத்தமாயாதிரை, சுத்தமாயாதிரைஎன்னும் இரண்டுமாம். இவை கீழ்பாகதிலோருகூரும் மேற்பாகதிலோருகூருமாக இருக்கும். கீழ்பாகத்திளுள்ளது அசுத்தமாயாதிரை இகலோக போக லஷிய முடையது. சுத்தமாயாதிரை பரலோக சாத்தியத்தையுடையது. இவற்றில் ஆண்டவர் வந்து அனுகிரகஞ்ச செய்கின்றபோது, முயற்சியில்லாத சாதாரண மனுஷ்யர்களுடைய கீழ்பாகத்திலுருகின்ற அசுத்தமாயை என்னும் பசைதிரையை மாத்திரம் நீக்குவார், ஆதலால், அக்காலத்தில் நாம் அத்திரை நீங்கியவுடன் கூடியவரையில் சுத்தமாக புனிதர்களாக இருக்கலாமே யல்லது, பெற வேண்டியதை பெற்று கொள்ளுகிரதற்குக் கூடாது . மேலும் பஞ்சகிருத்திய விபவங்களும் . இதர சித்தி முதலியவைகளும், ஆன்மானுபவத்தையும் செய்யவும் பெறவும் கூடாது. பின்னும் நன்முயற்சி செய்தே மேலேற வேண்டும்.

Monday, September 27, 2010

விவேகானந்தர் ஆன்மிக சிந்தனைகள்

* பாவங்களிலேயே மிகப்பெரிய பாவம், நீ உன்னைப் பலவீனன் என்று நினைப்பதே. உயர்ந்தவர் என்று யாரும் இல்லை. நீ பிரம்மமே என்பதை உணர். நீ கொடுக்கும் சக்தியைத் தவிர வேறு எங்கும் எந்தச் சக்தியும் இல்லை. சூரியனையும், நட்சத்திரங்களையும், பிரபஞ்சத்தையும் கடந்தவர்கள் நாம். மனிதனின் தெய்வீகத் தன்மையை அவனுக்குச் சொல். தீமையை மறுத்துவிடு, எதையும் உண்டுபண்ணாதே. எழுந்து நின்று, 'நானே தலைவன், அனைத்திற்கும் நானே தலைவன்' என்று கூறு. நாமே தடையை உண்டாக்கிக் கொள்கிறோம். நம்மால்தான் அதனை உடைத்து எறியவும் முடியும்.

* எந்தச் செயலும் உனக்கு முக்தி தர இயலாது. ஞானம் மட்டுமே அதைத் தர முடியும். ஞானத்தைத் தடுக்க முடியாது. அதை ஏற்பதோ தடுப்பதோ மனத்தால் முடியாது. ஞானம் வரும்போது மனம் அதை ஏற்றுக்கொண்டே ஆக வேண்டும். எனவே, ஞானம் மனத்தின் செயல் அல்ல. மனத்தின் மூலம் தன்னை வெளிப்படுத்திக் கொள்கிறது.

* உன் சொந்த இயல்பிற்கு உன்னைத் திரும்பக் கொண்டு வரவே, செயலும், வழிபாடும் அமைந்துள்ளன. உடலை ஆன்மா எனக் கருதுவது முழு மனமயக்கம். உடலுடன் இருக்கும்போதே நாம் முக்தர்களாகலாம். உடலுக்கும் ஆன்மாவிற்கும் பொதுவான எதுவும் இல்லை.

* 'சித்', 'அசித்', 'ஈஸ்வரன்' என்பதற்கு, ஆன்மா, இயற்கை, கடவுள் என்றும், உணர்வுள்ளது, உணர்வற்றது, உணர்வைக் கடந்தது என்றும் ராமானுஜர் மூன்றாகப் பிரிக்கிறார். இதற்கு மாறாக சங்கரர், 'சித்' அதாவது ஆன்மாவும், இறைவனும் ஒன்றே என்கிறார். இறைவனே உண்மை, இறைவனே அறிவு, இறைவனே எல்லையற்றவர்.


Thursday, September 23, 2010

வள்ளலாரின் பேருபதேசம்

பச்சைத்திரை நீங்கினால், மற்றத் திரைகள் அதிக விரைவில் நீங்கி போய்விடும். அந்த பசுமை வர்ணம் எப்படிப்பட்டதென்றால், கருமைக்கு முதல் வர்ணமான பசுமையாக இருக்கின்றது. இப்படிப்பட்ட அழுத்தமான திரை நீங்க வேண்டுமென ஷ்தொதரித்தும், தெய்வத்தை நினைத்தும், நமது குறையை ஊன்றியும் - இவ்வாண்ணமாக, இருக்கின்ற போதும் படுக்கின்றபோதும் இடைவிடாது இவ்விசாரதொடு ஆண்டவர் நமக்குண்மை தெரிவிக்க வேண்டுமென்கின்ற முயற்சியுடனிருந்தால், தெரிய வேண்டியதைத் தெரிந்து கொள்ளலாம்

அவ்விசாரம் பரம் அபரம் என்று இரண்டு வகையாயிருகின்றது. இவற்றி பரம் பரலோக விசாரம், அபரம் இகலோக விசாரம் இவ்விரண்டில் இகலோக விசாரம் விசாரமல்ல. சாதரணமாக ஒருவன் விசாரம் செய்து கொண்டிருக்கின்றனே யென்றால், அவ்விசாரம் விசாரமாகாது, உண்மை விசாரமு மல்ல, ஏனெனில், விசாரமேன்கின்றதர்க்கு பொருள்: வி - சாரம் என்பதில் விசாதாரண உலக விசாரத்தை மறுக்க வந்தது; அது மேலும் பரலோக விசாரத்தையே குறிக்கும் பொருட்டு வந்தது. ஜலத்தி லிருக்கின்ற பாசியை நீக்குவது போல், நமது ஆன்மாவைத் தெரியவொட்டாமல் மூடியிருகின்ற பச்சைத் திரையாகிய ராகதிகளை விசார அதியுஷ்ணத்தா லல்லது, மற்ற உஷ்ணங்களால் நீக்கமுடியாது. அந்த உஷ்ணம் யோகியினுடைய அனுபவத்தில் தெரியும். அதை மனுஷ்ய தரத்தில் உண்டு பண்ணுவதற்குத் தெரியாது. அந்த விசாரத்தைவிட ஆண்டவரை ஸ்தொதிர்ரம் செய்கின்றதிலும் தெய்வத்தை நினைக்கின்றதிலும் அதிக உஷ்ணம் உண்டாகும். யோகிகள் வனம், மலை, முழை முதலியவற்றிக்கு போய், நூறு ஆயிரம் முதலிய வருஷக்காலம் தவஞ்செய்து, இவுஷ்ணத்தை உண்டு பண்ணி கொள்ளுகிறார்கள். இப்படித் தவம் செய்து உஷ்ணத்தை உண்டு பண்ணிக் கொள்ளுகின்றதைப் பார்க்கிலும், தெய்வத்தை ஷ்தொதரிம் செய்கின்றதிலும் நினைகின்றதிலும் - இதை விடக் - கோடி பங்கு, பத்துகோடிப் பங்கு அதிகமாக உஷ்ணம் உண்டு பண்ணிகொள்ளலாம். எவ்வாறெனில்: ஒரு ஜமா நேரம், மனதில் இக விசார மின்றிப் பர விசாரிப்புடன் ஆன்ம நெகிழ்ச்சியோடு தெய்வத்தை சிந்தித்து கொண்டாவது திருந்தால், நாம் பெற வேண்டியதை பெற்று கொள்ளலாம் .

வள்ளலாரின் பேருபதேசம்

வள்ளலாரின் பேருபதேசம்

ஸ்ரீமுக வருஷம், ஐப்பசிமீ, எஉ, புதவாரம் , பகல் அ மணிக்கு, மேட்டுக்குப்பம் என்னும் சிதிவலகத் திருமாளிகையில் முதல் முதல் கொடி கட்டின உடனே நடந்த விவகாரத்தின் குறிப்பு.

இங்குள்ள நீங்கள் எல்லாவரும் இதுவரைக்கும் இருந்தது போல் இனியும் வீண்காலம் கழித்துக்கொண்டு டிரதீர்கள் . இது முதல் சாலைக்கு ஆண்டவர் போகின்ற - பத்து தினமாகிய கொஞ்ச காலம் - வரையில், நீங்கள் எல்லாவரும் நல்ல விசாரணையில் இருந்து கொண்டிருங்கள். அந்த விசாரணை எதுவென்றால்; நம் நம்முடைய நிலை எப்படிப்பட்டது? நமக்கு மேல் நம்மை அதிஷ்டிக்கின்ற தெய்வத்தினுடைய நிலை எப்படிப்பட்டது? என்று விசாரிக்கவேண்டியது. அதற்க்கு தக்கப்படி, நீங்கள் ஒருமித்தாவது, அல்லது தனித்தனியாகவாவது, உங்களறிவிற்கும் ஒழுக்கத்துக்கும் ஒத்தவர்களுடன் கூடியாவது, அல்லது - வேலாயுத முதலியாரைக் கேட்டால் மனுஷயதரத்தில் போதுமான வரையில் சொல்லுவார். - அவரிடம் அப்படி கேட்டாவது நல்ல விசாரனையிலிருங்கள், அல்லது, தனியாகவம் விசாரிக்கலாம். இவ்விசாரணை முகத்திலிருந்தால், நமது ஆன்ம அறிவை விளக்கமின்றி மூடிகொண்டிருன்கின்ற அனந்த திரைகளில் அழுதமாயிருகின்ற முதல் திரையாகிய பச்சைதிரை முதலில் நீங்கிவிடும்

Saturday, September 18, 2010

திருக்குறள் -» அறத்துப்பால்

இன்சொல் இனிதீன்றல் காண்பான் எவன்கொலோ
வன்சொல் வழங்கு வது?

( குறள் எண் : 99 )

மு.வ : இனிய சொற்கள் இன்பம் பயத்தலைக் காண்கின்றவன், அவற்றிற்கு மாறான வன்சொற்களை வழங்குவது என்ன பயன் கருதியோ?

சாலமன் பாப்பையா : பிறர் சொல்லும் இனிய சொற்கள், இன்பம் தருவதை உணர்ந்தவன், பிறர்க்கும் தனக்கும் துன்பம் தரும் கடும் சொற்களைப் பேசுவது என்ன பயன் கருதியோ?


Saturday, September 4, 2010

அகவலில் இருந்து சில துளிகள்

சினமுத லனைதயுந்த் தீர்த்தெனை நனவினுங்

கனவினும் பிரியக் கருணைநற் ரையே

தூக்கமுஞ்ச சோம்புமென் றுன்பமு மச்சமும்

ஏக்கமும் நீக்கிய வென்றனித் தாயே

துன்பெலாம் தவிர்த்துளே என்பலாம் நிரம்ப

இன்பெலா மளித்த வென்றனித் தந்தையே

எல்லா நன்மையு மென்றெனக் களித்த

எல்லாம் வல்லசித் தென்றனித் தந்தையே

நாயிற் கடையே னலம்பெறக் காட்டிய

தாயிற் பெரிதுந் தயவுடைத் தந்தையே

Wednesday, September 1, 2010

வள்ளலாரின் ஆறாம் திருமுறையில்ருந்து

அகரநிலை விளங்குசத்தார் அனைவர்க்கும் அவர்பால்

அமர்ந்தசத்தி மாரவர்கள் அனைவருக்கும் அவரால்

பகரவரும் அண்டவகை அனைத்தினுக்கும் பிண்டப்

பகுதிகள்அங் கனைத்தினுக்கும் பதங்கள்அனைத் தினுக்கும்

இகரமுறும் உயிர்எவைக்கும் கருவிகள்அங் கெவைக்கும்

எப்பொருட்க்கும் அனுபவங்கள் எவைக்கும்முத்தி எவைக்கும்

சிகரமுதல் சித்திவகை எவைக்கும்ஒளி வழங்கும்

திருச்சிற்றம் பலந்தினிலே தெய்வம்ஒன்றே கண்டீர்.