* நம்முள் நன்மை, தீமை என்று இரு விதமான எண்ணங் களும் இருக் கின்றன. நல்ல விஷயங்களில் மட்டும் கருத்தைச் செலுத்தினால் மட்டுமே நாம் நல்லவர்களாக முடியும்.
* நாம் இப்போது இருக்கும் நிலைமைக்கு நாமே பொறுப்பாளிகள். எதிர்காலத்தில் நாம் எப்படி எல்லாம் இருக்க வேண்டும் என்று விரும்புகிறோமோ அதை நம்முடைய செயல்களால் உண்டாக்கிக் கொள்ள முடியும்.
* மகத்தான செயல்களைச் செய்வதற்காக ஆண்டவன் நம்மைப் படைத்திருக்கிறான். அவற்றை செய்வதற்கு விடா முயற்சியோடு உங்கள் கடமைகளைச் செய் யுங்கள்.
* சரியான வழியில் செலுத்தப்பட்ட மனம் நம்மைக் காக்கும். நம்மை விடுதலை பெறச் செய்யும். மனதை ஒருமுகப்படுத்தும் போது நம் மனோசக்தி வளரும். அதனால், நாம் அதிக அளவில் அறிவைப் பெறமுடியும்.
* தூய்மை, பொறுமை, விடாமுயற்சி ஆகிய மூன்றும் வெற்றிக்கு இன்றியமையாதவை. அத்துடன் இவை அனைத்திற்கும் மேலாக அன்பு இருந்தாக வேண்டும்.
* நாம் எதையும் சாதிக்கவல்லவர்கள். உறுதியான மன நிலையில் விஷத்தைக் கூட பொருட்படுத்தாமல் இருந்தால், அந்த விஷம் கூட சக்தி அற்றதாகி விடும்.
No comments:
Post a Comment