Monday, August 23, 2010

swami viveganandar sinthanaigal

தொடர்ந்து நல்ல எண்ணங்களையே சிந்தித்தபடி நல்ல செயல்களைச் செய்து வருவதால் மட்டுமே தீயஎண்ணங்களை தலைகாட்டாதபடி தடுக்க முடியும். ஒழுக்கம் என்பது மீண்டும் மீண்டும் செய்யப்படும் பழக்கங்களால் தான் உருவாகிறது. எனவே, தன்னைச் சீர்படுத்திக் கொள்ள முயல்பவன், நல்ல பழக்கங் களை இடைவிடாது பின்பற்ற வேண்டும். இந்த உலகத்திலேயே நன்மைக்கு அழைத்துச் செல்லும் பாதை தான் மிகவும் கரடுமுரடாகவும், செங்குத்தானதாகவும் இருக்கிறது. அந்தப் பாதையில் இத்தனை பேர் வெற்றி பெற்றிருக்கிறார்களே என்பது தான் வியப்பிற்குரிய விஷயம். தோல்வியை அடைவதில் ஒன்றும் வியப்பில்லை. ஆயிரம் முறை இடறினாலும் நல்ல ஒழுக்கத்தில் உறுதியாக நிலை நிற்பவனுக்கே வெற்றி கிடைக்கும். லட்சியவாதி தன் பணியில் ஏளனம், எதிர்ப்பு ஆகியவற்றை சமாளித்தாக வேண்டும். வாழுங்காலத்தில் வெற்றியாளர்கள் தவறாகவே புரிந்து கொள்ளப்படுகிறார்கள். எனவே, எதிர்ப்பையும், அடக்குமுறையையும் வரவேற்கக் கற்றுக்கொள்ளுங்கள். ஒன்று மட்டும் நிச்சயம். எத்தனை எதிர்ப்பும், இடையூறும் ஏற்பட்டாலும் கடவுளிடம் முழுமையாக நம்பிக்கை கொண்டவன் தன் உறுதியிலிருந்தும், வைராக்கியத்திலிருந்தும் அசையாமல் நிலைத்து நிற்பான். - swami vivegananadar

No comments:

Post a Comment