Saturday, August 28, 2010

இறை இன்ப குழைவு

கருவிற் கலந்த துணையேஎன்

கனிவில் கலந்த அமுதேஎன்

கண்ணிற் கலந்த ஒளியேஎன்

கருத்திற் கலந்த களிப்பேஎன்

உருவிற் கலந்த அழகேஎன்

உயிரிற் கலந்த உறவேஎன்

உணர்விற் கலந்த சுகமேஎன்

னுடைய ஒருமைப் பெருமானே

தெருவிற் கலந்து விளையாடுஞ்ச

சிறியேன் தனக்கே மெய்ஞ்ஞான

சித்தி அளித்த பெருங்கருணைத்

தேவே உலகத் திரளெல்லாம்

மருவிக் கலந்து வாழ்வதற்கு

வாய்த்த தருணம் இதுஎன்றே

வாயே பறையாய் அறைகின்றேன்

எந்தை கருணை வலத்தாலே

No comments:

Post a Comment